காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று சனிக்கிழமை திருவெம்பாவை உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழாவில் கைலாச வாகனத்தில் எழுந்தருளும் திருவிழா இன்றையதினம் இடம்பெற வுள்ளது காலை 07.00 மணியலவில் சிவனிற்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பின்னர் ஐயனாரிற்கு விசேட அபிசேக ஆராதணைகள் இடம்பெறும் ,தொடர்ந்து அனைத்து பரிவாரமூர்த்திகளுக்கும் விசேட பூஜை இடம் பெற்று 10.00 மணியளவில் சிற்சபையில் தில்லைக்கூத்தனிற்கு விசேட பூஜை இடம் பெற்று சிதம்பர ஆதினகர்த்தா அவர்களால் திருவெம்பாவை பாடல் ஓதப்பட்டு மாணிக்கவாசகப்பெருமான் உள்வீதி வலம் வரும் அற்புதக்காட்சியும் இடம் பெறும் தொடர்ந்து 11.30 மணியலவில் வசந்த மண்டபத்தில் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானிற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜை இடம் பெற்று இரண்டாம் வீதி வலம் வரும் அலங்கார காட்சியும் இடம் பெறும், சிதம்பரத்தின் அனைத்து உற்சவமும் மதியம் 1.00 மணியளவில் இனிதே நிறைவு பெறுமென ஆதீன கர்த்தா களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.