இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடபடும் பொங்கல் விழா இம்முறை விஷேடமாக கொண்டாட படவுள்ளது!
அந்த வகையில் எதிர்வரும் 10ம் திகதி முதல் யாழ் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யபட்ட 16 அணிகளிடையான தாச்சி போட்டி ஆரம்பமாகி மின்னொளியில் இடம்பெறவுள்ளது! அத்துடன் கபடி போட்டியும் நடைபெறவுள்ளது!
11ம் திகதி காலை 7 மணிக்கு பண்டத்தரிப்பு சந்தியில் இருந்து வடமாகாண ரீதியிலான சைக்கிளோட்டபோட்டி இடம்பெறவுள்ளது!
12ம் திகதி காலை 6.30 மணிக்கு சித்திரமேழி சந்தியில் இருந்து மாபெரும் மரதன் ஓட்ட போட்டியும்
பொங்கல் தினத்தன்று காலை 8.30 மணி முதல் காங்கேசன் துறை வெளிச்சவீட்டருகே பட்டம் விடும் போட்டியும் மாலை 2 மணிமுதல் இளவாலை வாலிபத்திடலில் சறுக்கு மரம் ஏறுதல், தலகணைச் சண்டை, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், முதலான பாரம் பரிய விளையாட்டுப் போட்டிகளும், இரவு 7 மணி முதல் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.