இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக தான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஆதரவளித்து கொண்டு வந்ததோ அதே போலத்தான் இம்முறை மறைமுகமாக ஆதரவளித்துகோத்தபாய ராஜபக்ச அவர்களையும் ஆட்சிக்குக் கொண்டு வந்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும் எனவே அவர்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.
வடக்குக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்கப்பட்ட கேள்விக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அத்துடன்நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமெனவும்அனந்தி சசிதரன் தெரிவித்தார். கருணா அம்மான் என்பவர் இன்று சுதந்திரமாக வெளியில் தெரிகின்றார் எனினும் அவரின் கீழ் செயற்பட்ட இளைஞர் யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளார்கள் எனவே இது ஒரு கவலைக்குரிய விடயமாகும் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறித்திரிந்த அரசாங்கம் கூட இந்த கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தற்போது ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்கள் இந்த அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.