இந்த 6 ராசிக்காரர்களுக்கும் சாப்பாடுதான் முக்கியம்! கோபமாக இருக்கும் போது நெருங்கவே வேண்டாம்

பொதுவாக அனைவரும் யாருடன் வெளியே செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.

ஆனால் சிலர் மட்டும் எந்த ஹோட்டலுக்கு செல்லலாம், என்ன சாப்பிடலாம் என்று திட்டமிடுவார்கள்.

சாப்பிடுவது என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும், ஆனால் சிலருக்கு மட்டுமே அது பிடித்த வேலையாக இருக்கும். இந்த குணம் அவர்களின் ராசியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உணவை அதிகமாக விரும்பும் ராசிகள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகச்சிறந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் விரும்புவார்கள். ஹோட்டல்களைக் காட்டிலும் வீட்டு உணவுகளே இவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும். சமைக்க தெரியாமல் இருந்தாலும் சுவையாக சாப்பிடுவதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நம்புகிறவர்கள் இவர்கள். இவர்கள் தங்களை போலவே நன்றாக சாப்பிடுபவர்களின் நட்பை அதிகம் விரும்புவார்கள்.

தனுசு
உணவுகளைக் காட்டிலும் இனிப்பு மற்றும் காரமான தின்பண்டங்களை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். பொதுவாக இவர்கள் சாகசத்தை விரும்புவதால் புதிய உணவுகளை முயற்சிக்க விரும்புவார்கள். வித்தியாசமான உணவு, வித்தியசமான ஹோட்டல் என்று கேள்விப்பட்டால் உடனடியாக அங்கு சென்று விடுவார்கள். உணவு வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருவர்கள் கருதுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் உணவின் மீதான தங்களின் காதலை ஒருபோதும் வெளிப்படையாக கட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளக் கூடிய உணவுகள் என்று இவர்களுக்கு தனி பட்டியலே இருக்கும். உணவுதான் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான அடையாளமாக இவர்கள் நினைப்பார்கள். எவ்வளவுதான் நல்ல உணவு இவர்களுக்கு பரிமாறப்பட்டாலும் இவர்களின் மனது சாலையோர உணவுகளைத்தான் விரும்புவார்கள். இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் உணவுகளில் எப்பொழுதும் சாலையோர உணவுகள் இருக்கும்.

ரிஷபம்
வெளியே செல்லும் போது சாப்பிட வாங்கித்தரா விட்டால் இவர்கள் வெளியே வருவதே மிகவும் கடினமான ஒன்றுதான். இவர்கள் எப்பொழுதும் வீட்டில் தங்கள் அம்மாவிடமும், மனைவியிடமும் காரமான உணவை சமைத்து தரும்படியும் தொல்லை செய்து கொண்டே இருப்பார்கள்.

இவர்களை எந்த உணவும் திருப்திப்படுத்த முடியாது அதனாலேயே இவர்களுக்கு சமைப்பவர்கள் சலித்து போய்விடுவார்கள். இவர்கள் விரும்பும் உணவு இவர்களுக்கு பிடித்த சுவையில் கிடைக்காதபோது இவர்கள் அதிக கோபப்படுவார்கள். சுவையற்ற உணவை இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

துலாம்
இவர்கள் நள்ளிரவு சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் இரவில் பசியுடன் இருப்பார்கள், தூக்கத்தில் இருந்து விழித்தால் இவர்கள் முதலில் தேடுவது தின்பண்டங்களைத்தான். உணவுகளைக் காட்டிலும் இனிப்பு மற்றும் காரமான தின்பண்டங்களை இவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

அனைத்தையும் ஒழுங்கை கடைபிடிக்கும் இவர்கள் உணவு விஷயத்தில் மட்டும் எந்த ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் பின்பற்றுவதில்லை. தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக இருந்தாலும் கூட உணவுதான் இவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது அதிகம் சாப்பிடுவார்கள். மகிழ்ச்சியாக இருக்கும்போது இதைத்தான் செய்வார்கள். இவர்கள் விரக்தியில் இருக்கும்போது அதிகமாகவும், வேகமாகவும் சாப்பிடுவார்கள். தங்களின் உணர்ச்சிகளில் இருந்து தப்பிக்க இவர்கள் உணவை பயன்படுத்துகிறார்கள்.

ஒருவரை கொல்லுமளவிக்கு இவர்கள் கோபம் வந்தால் இவர்கள் தங்களின் கோபத்தை உணவில் காட்டி தன்னை திருப்திப்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இவர்கள் சாகசத்தை விரும்புவதால் புதிய உணவுகளை முயற்சிக்க விரும்புவார்கள். வித்தியாசமான உணவு, வித்தியசமான ஹோட்டல் என்று கேள்விப்பட்டால் உடனடியாக அங்கு சென்று விடுவார்கள்.