இன்றைய காலக்கட்டத்தில் டிவி முன் நேரம் செலவழிப்பதை விட சுமார்ட் போனுடன் நேரம் செலவழிப்பதே அதிகமாக உள்ளது.
இதற்கு காரணம் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகள் தான். எந்நேரமும் இவற்றில் உள்ள எழுத்துக்கள் மற்றும் படங்களை கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதால், கண்கள் விரைவில் சோர்ந்து நாளடைவில் பார்வை மங்கலாக ஆரம்பிக்கின்றன.
இந்த பிரச்சனைக்கு பலர் உடனே மருத்துவரிடமும் செல்லமாட்டார்கள். அதே சமயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் சாப்பிடமாட்டார்கள் மற்றும் கண் பயிற்சிகளையும் செய்யமாட்டார்கள்.
இது இப்படியே நீடித்தால், பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு முக்கியமான சில காரணங்களை இங்கே காணலாம்…
* குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.
*இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
* மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
* உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.
* பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
* அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
* மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.