இந்தக் கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார். அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம். கேட்டு அறிந்திருப்போம்.
அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்..
பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும் அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.
ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருபபார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.
செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவார்.
அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.
டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.