சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடயம்.
தமிழுக்கு அவ்வளவு மரியாதை தற்போது உலகில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் கூகுள் அட் சென்ஸ் , தமிழையும் தனது அதிகார பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.