சில பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் புகழ்பெற்று விளங்கும் கவா டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றது.
என்ன தான் நன்மைகள் இருந்தாலும் அதிகம் பருகினால் ஆபத்து தான் ஏற்படும்.
இந்த பதிவில் கவா டீயின் நன்மை, தீமைகள் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
- கவா டீ பக்கவாத நோயாளிகளுக்கு சிறந்தது.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க்கு முன் பின் உள்ள பிரச்சினைகளை சரி செய்கிறது.
- தசைகளில் ஏற்படும் வலி போன்றவற்றிற்கு கவா டீ வலி நிவாரணியாக செயல்படுகிறது.
- இதன் வேரை வெறுமனே வாயில் போட்டு மென்றாலே போதும் வலிகள் குறைந்துவிடும் .
- பல் வலிக்கு மற்றும் தொண்டை புண்ணுக்கு இதமாக இருக்கும்.
- சிறுநீரக பாதை தொற்று, சிஸ்டிடிஸ், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலையும் தீர்க்க உதவுகிறது.
- 2004 மனித மனோதத்துவவியல் ஆய்வின் படி, கவா டீ பருகுவதால் மூளையின் செயல்திறன் மேம்படுகிறது என்கிறது.
- கவா தாவரத்தின் சாறு அறிவாற்றலை அதிகரிப்பதோடு மகிழ்ச்சியையும் தருகிறது.
- கவா சாறை பருகுவதால் மார்பக, சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான சைட்டோடாக்ஸிசிட்டியைக் கொண்டுள்ளது.
- ஆதலால் புற்றுநோய் ஏற்படாமல் கவா பாதுக்காக்கிறது.
தீமைகள்
கவாவை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், கவா செடியை நுகர்வதால் கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினர் கவா தொடர்பான தயாரிப்புகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக எச்சரித்துள்ளனர்.
- அஜீரணம்
- தலைவலி
- மயக்கம்
- சொறி ஏற்படுதல்
- வயிற்றுப்போக்கு
- தலைச்சுற்றல்
- கல்லீரல் பாதிப்பு போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இது காணப்படுகிறது.
வீட்டிலேயே கவா டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
2-4 டேபிள் ஸ்பூன் உலர்ந்த கவா பொடி
1 கப் தண்ணீர்
தயாரிக்கும் முறை
கவா பொடி மற்றும் தண்ணீரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
4 நிமிடங்கள் வரை இரண்டையும் நன்றாக கலக்குங்கள்.
ஒரு வடிகட்டியில் அதை ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். பிறகு டீ கப்பில் ஊற்றி சுவையுங்கள்.