நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இன்று வீட்டில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
நம் வாழ்க்கை சூழலும், உணவு பழக்க முறை மாறியதில், 35 வயதை கடந்தவுடன் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு ஆய்வின்படி, வேம்பில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. வேம்பின் மெத்தனாலிக் சாறு பரிசோதிக்கப்பட்டபோது, உடலில் உள்ள இரத்த குளுக்கோஸைக் குறைப்பதன் மூலம் ஒரு நல்ல வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மையைக் காட்டியுள்ளது.
தொடர்ந்து, நோயாளிக்கு இன்சுலின் ஊசிபோடுவதைக் குறைக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூலிகை மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படும் பகுதிகளில், நீரிழிவு நோய்க்கு வேம்பின் தேவை அதிகமாக உள்ளது. இருப்பினும், நவீன மருத்துவச் சிகிச்சைகள் வளர்ந்து வரும் நிலையில், வேம்பு சாறுகள் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வேம்பை எடுத்துக்கொள்ளலாம். எனினும், ஒரு சுகாதார நிபுணருடன் முறையான ஆலோசனையின் பின்னரே இதைச் செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் சில தயாரிப்புகளுடன் வேம்பை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் நோயாளிக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும். வேப்பிலையில் பானம் தயாரித்து அளவாக அருந்தினால் ஆரோக்கியமான நன்மைகளை பெற்று கொள்ள முடியும்.
வேம்பு டீ
உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த, வேம்பு டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு நீரிழிவு நோயாளி கசப்பான இந்த மூலிகையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேம்பு காபி செய்வது பற்றி இங்கே காணலாம்.
தயாரிப்பு
- அரை லிட்டர் தண்ணீரில், சுமார் 20 வேப்ப இலைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இலைகள் மென்மையாகவும், தண்ணீர் கொஞ்சம் பச்சை நிறமாகவும் மாறும்போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
- பின்னர் வடிகட்டி அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மாத்திரம் குடிக்கலாம்.