பித்தப்பை நமது கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு பாலமாக செயல்படுகிறது. பித்தப்பை என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய சாக்.
பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன.
இந்த பித்தக்கற்கள் சில நேரங்களில் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் முதுகுவலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
இந்த பித்தப்பை கற்களை சில நேரங்களில் மருந்துகளால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.
ஒரு சிலர் மட்டுமே உணவை தங்கள் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் பித்தப்பை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
பேக்கிங் உணவுகள்
நீங்கள் பித்தப்பை பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மஃபின்கள், குக்கீகள், கப் கேக்குகள் மற்றும் பிற வேக வைத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிகளவு டிரான்ஸ் கொழுப்புகள் பித்தப்பையில் கொழுப்பை சரியாக செயலாக்க இயலாமல் வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை பிரச்சினை இருப்பவர்கள் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
காபி
பித்தப்பை சுருங்கிப் போவதற்கு காபி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்
அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை உண்ணும் போது அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இனிப்புகள் வேண்டாம்
அதிக சர்க்கரை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கடினமாக்குகிறது. இதனால் இதய நோய்கள், சிறுநீர்ப்பையில் கற்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இனிப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.