இந்திய முழுவதுமே மருத்துவ மனையில் நிகழும் அலட்சிய போக்கால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கேட்கும் போதே பதைபதைக்க வைக்கிறது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்கு பின்னர் அங்கு தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மாத்திரை சாப்பிடுவதற்காக மருத்தவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டு இருக்கிறார்.
வேலை அவசரத்தில் அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து கையில் கொடுத்து சென்றுள்ளார் பணிப்பெண்.
அது ஆசிட் பாட்டில் என்று அறியாத பெண் மாத்திரையை வாயில் போட்டு மட மடவென குடித்துள்ளார். வயிற்றுக்குள் சென்று பயங்கர எரிச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அலறித் துடித்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உள்ளுறுப்புகள் எல்லாம் முற்றிலுமாக வெந்த நிலையில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சிம்பிளாக பதிலளித்து விட்டது.
கண் சிகிச்சைக்கு வந்த பெண் உயிரையே பறிகொடுத்து சென்றுள்ளது. அப்பகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.