தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டரை மாத குழந்தையை கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து வந்து விட்ட நிலையில், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை மாத குழந்தையை காணவில்லை என கணவரிடம் தெரிவித்துள்ளார்.இருவரும் குழந்தையை தேடிய நிலையில் வீட்டின் பின்பக்கம் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கடையம் பொலிசார், தனது கணவருக்கு தன் நடத்தை மீது சந்தேகம் எழுந்து சண்டையிட்டதால், தாய் லட்சுமி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இதனை மறுத்த சாத்தாக்குட்டி தமது மனைவியை, பொலிசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் அவ்வாறு ஒப்புக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் தனதுக்கும், தனது மனைவிக்கு இடையில் எவ்வித சண்டையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடையம் காவல்நிலையத்தில் 6 வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பதால், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே பொலிசார் இவ்வாறு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனுடன், குழந்தையை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரி, பொதுமக்கள் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.