பெப்ரவரி மாதம் முழுவதும் யார் யாருக்கு என்ன அதிர்ஷ்டம் தெரியுமா? இந்த ராசிக்கு விபரீத ராஜயோகம்…!

பெப்ரவரி மாதம் காதலர்களுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் நிறைய முக்கிய பண்டிகைகள் உள்ளன.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பலவிதமாக இருக்கும். சிலருக்கு நன்மை செய்யும், சிலருக்கு பாதகமாக இருக்கும்.

நட்சத்திரங்களின் பாதங்களின் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொறுத்து எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
பிப்ரவரி மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். காதலான மாதம். கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாதம் உற்சாகமாக இருக்கும். நிறைய சுப செலவுகள் நடைபெறும். பணம் விசயங்களில் நீங்க நிறைய கவனமாக இருக்கணும்.

தேவையற்ற செலவுகள் மன அழுத்தத்தை கொடுக்கும் எனவே பணத்தை பத்திரமாக செலவு பண்ணுங்க. யாருக்காகவும் பணத்தை கடனாக வாங்கி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடாதீங்க உங்க பணத்தை முதலீடு செய்யும் போது நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். நெருங்கிய நபர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

சந்திர தரிசனம் பண்ணுங்க சோமவார விரதம் இருங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. வேலை செய்யும் இடத்தில் நிறைய சவால்கள் நிறைந்திருக்கும்.

புதிய வேலைக்கு மாற நினைத்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்து விட்டு அப்புறம் அவஸ்தை பட நேரிடும். தொழிலதிபராக இருந்தால் இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனதை திசை திருப்புவார்கள் அதிலிருந்து தப்பித்தால் மட்டுமே உங்க இலக்கை அடைய முடியும். அப்பாவினால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அப்பா வழியில் பணவரவு அதிகமாகும். உங்களுக்கு இந்த மாதத்தில் காதலால் உற்சாகம் பிறக்கும்.

இந்த மாதம் நெருப்பு உங்களுக்கு நன்மை செய்யும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் சந்தோஷ சம்பவங்கள் அரங்கேறும். நீங்க செய்யும் செயல்களை உயரதிகாரிகள் அதிகம் பாராட்டுவார்கள்.

கிடைக்கப் போகும் புரமோசன், சம்பள உயர்வுக்கு நல்ல அடித்தளமாக அமையும். பணிச்சுமை அதிகரித்தாலும் எளிதாக கையாளுவீர்கள். நீங்க விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு நல்ல இடமாற்றம் கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான மாதமாக உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பண வரவை கொடுக்கும். அதிர்ஷ்டகரமான மாதமாக இருப்பதால் நிதி நிலைமை உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். இந்த மாதம் காதல் மாதம். அன்பானவரிடம் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள்.

உங்க காதல் வாழ்க்கை திருமணம் வரைக்கும் செல்லும். பண வரவு அபரிமிதமாக இருக்கும் அதுவே உங்களை சாதனை செய்யத் தூண்டும். உங்க உடல் ஆரோக்கியமும் இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும்.

மிதுனம்
பிப்ரவரி மாதம் உங்களுக்கு சுமாரானதாகவே இருக்கும். சோம்பேறித்தனம்தான் உங்க வேலையை கெடுக்கும். கவலைகள் அதிகரிக்கும் இதுவே உங்களின் வெற்றியை தடுக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே வேலையில் வெற்றி பெற முடியும்.

வேலைப்பளு உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். நீங்க திட்டமிட்டு செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் வேலையை ப்ளான் செய்து செயல்படுத்துங்கள் வேலையை ஈசியாக முடிப்பிங்க. வணிகர்களுக்கு வியாபாரத்தில் லாபம் வரும். பொதுவாகவே பண விவகாரங்கள் உங்களுக்கு சுமாராகவே இருக்கும். மாத மத்தியில் உங்களுக்கு பண சிக்கல்கள் ஏற்படும்.

உங்க குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சந்தோஷமாகவே இருக்கும். குழந்தைகள் உடல் ஆரோக்கியமும், படிப்பும் நன்றாகவே இருக்கும் கவலைப்பட தேவையில்லை. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க இல்லாட்டி சிக்கலை ஏற்படுத்தி விடும். காதல் விவகாரங்களில் கவனமாக இருங்க. பயணங்கள் சந்தோஷமாக இருக்கும். ஆன்மீன பயணம் செல்வீர்கள் ஆலய தரிசனம் அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும்.

கடகம்
பிப்ரவரி மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதம். மனம் கவர்ந்த ஒருவரை சந்திப்பீர்கள். காதலுக்கான வானிலை நன்றாகவே இருக்கும். உங்களின் உணர்வுகள் மனதிலும் உடம்பிலும் ஒருவித உற்சாகத்தை தரலாம். நீங்கள் ஏற்கனவே காதலிப்பராக இருந்தால் அந்த காதல் திருமணத்தை நோக்கி நகர்த்தும். உங்களின் கல்யாண கனவு விரைவில் நிறைவேறும்.

அன்பிற்கு உரியவருடனான பிணைப்பு அதிகரிக்கும். உறவுகளும் இனிமையாகும். வேலையில் கவனமாக இருப்பீங்க. குடும்ப வாழ்க்கை, ஆபிஸ் வேலை இரண்டையும் சரி சமமாக நீங்க ஹேண்டில் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நீங்க சரி சமமாக நேரத்தை செலவு செய்வீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். கணவன் மனைவி உறவில் சுமாராகவே இருக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு இது நல்ல மாதம். பண வரவு நன்றாகவே இருக்கும். முன்னேற்றத்திற்காக இந்த மாதம் செய்யும் முயற்சி வெற்றியாக முடியும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாகவே இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் புதிய ஆற்றலை பெருவீர்கள்.

பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர்.

சிம்மம்
இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் மாற்றத்தினால் நிறைய நன்மைகளும் சில சங்கடங்களும் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நேர்மையுடனும் பாசிட்டிவ் சிந்தனையுடனும் எதையும் எதிர் கொள்வீர்கள். நிறைய சவால்களை சந்திப்பீர்கள் அவற்றை சாதனையாக மாற்றுவீர்கள்.

உங்க குடுத்ப உறவில் நிறைய சந்தோஷங்கள் நடைபெறும். உங்க காதல் வாழ்க்கை இந்த மாதம் திருமணத்தை நோக்கி நகரும். கல்யாணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. உங்க அன்பான துணையின் ஆதரவு கிடைக்கும். மென்மையான போக்கு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிற்கு அருகிலோ சில வீணான வாக்குவாதங்கள் பிரச்சினைகள் எழலாம் நீங்கள் அது மாதிரியான சூழ்நிலையில் வம்புகளை தவிர்த்து விடுங்கள்.

தவறு உங்களுடையது என்றால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். வேலை செய்யும் இடத்தில் புது புது ஐடியாக்கள் எழலாம் அது உங்களுக்கு நிறைய நன்மையை கொண்டு வந்து கொடுக்கும். பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு இந்த மாதம் ரொம்ப நல்ல மாதமாக இருக்கும் வருமானம் அற்புதமாக இருக்கும். செய்யும் முதலீடுகளில் நிறைய லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இந்த மாதம் உற்சாகமாக இருக்கும். தேர்வுகளை சிறப்பாக எழுதுவீர்கள். ஹார்ட் ஒர்க் பண்ணுங்க ரொம்ப நல்லதாகவே நடக்கும். பண வருமானம் அதிகமாக இருக்கும் வங்கி சேமிப்பும் சிறப்பாகவே இருக்கும் என்பதால் நிதிப்பிரச்சினைகள் எதுவும் எழ வாய்ப்பு இல்லை. உடல் ஆரோக்கியமும் உங்களுக்கு அற்புதமாகவே இருக்கும்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும்

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் வேலைப்பளு குறைந்து ரிலாக்ஸ் ஆக மாறுவீர்கள். எந்த வேலையாக இருந்தாலும் நிதானமாகவும் அதை அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்வீர்கள் அதுவே உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். எதிர்காலத்தில் அதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருப்பதற்காக இது சிறந்த படிப்பினையாக இருக்கும். கிரகங்களின் நகர்வு உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களின் தன்னம்பிக்கை துணிச்சல் அதிகமாகும்.

அதே வேகத்தோடு வேலையை செய்து முடிப்பீர்கள். பிசினஸ் செய்பவர்கள் சில நல்ல விசயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். பண விசயத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்க நிதி நிலைமை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உங்க ரொமான்ஸ் வாழ்க்கை இந்த மாதம் அற்புதமாகவும் காதல் அதிகம் நிறைந்ததாகவும் இருக்கும்.

பெர்சனல் வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்கும். உங்களின் சொந்த வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாசமும் நேசமும் அதிகமாக கிடைக்கும். வேலை விசயமாக நீங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பீர்கள். உங்களின் அன்பான மனைவியிடம் இருந்து உணர்வுப்பூர்வமான ஆதரவு கிடைக்கும். உங்களின் திருமண வாழ்க்கை உற்சாகமும் ஸ்திர தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே நீங்க ரொம்ப பிசியானவங்க. ரொமான்ஸ் உணர்வு அதிகம் கொண்டவர்கள் நீங்கள். கிரகங்களின் சஞ்சாரம் நிறைய வெற்றிகளை தேடித்தரும். புதிய வேலைகள் கிடைத்தால் சேரலாம்.

பிசினஸ் செய்பவர்களுக்கு உற்சாகமாக முதலீடு செய்யுங்கள் நல்ல லாபம் கிடைக்கும். இது உங்களுக்கு சாதகமான மாதம். கடின உழைப்பாளர்களுக்கு நல்ல மாதம் சாதகமான மாதமாக அமைகிறது. சில முக்கியமான வேலைகளை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். ரொம்ப பிசியாக இருந்தாலும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள். நிறைய நேரம் செலவிடுவீர்கள்.

பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப முக்கியமான மாதம். ரொம்ப ரிஸ்க் எடுத்து வேலைகளை செய்வீர்கள். திருமண வாழ்க்கை உங்களுக்கு நிறைய சந்தோஷத்தைக் கொடுக்கும். இந்த மாதத்தில் நீங்க உங்க வேலையையும் பெர்சனல் வாழ்க்கையும் பேலன்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இரண்டுக்குமே சமமாக நேரத்தை ஒதுக்கினால் சந்தோஷமாக இந்த மாதத்தை கடந்து விடலாம். டோன்ட் ஒர்ரி பீ ஹேப்பின்னு இருங்க உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

பஞ்ச பூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் நன்மையும், தீமையும் கலந்த பலனாகவே இருக்கும். உங்க நிதி நிலைமை இந்த மாதம் சுமார்தான். பணத்தை யாரிடமும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். நிறைய பணம் வரும். அதே நேரம் அபரிமிதமான செலவுகள் ஏமாற்றத்தை கொடுக்கும்.

முக்கியமான பணிகள் உங்களுக்கு கொடுப்பார்கள். அதை திறமையாக செய்து முடிப்பீர்கள். பல புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய வேலை கிடைக்கும். ரொம்ப பிஸியாக இருப்பீர்கள். பல பொறுப்புகள் ஒன்றாக ஒரே நேரத்தில் வருவதால் உற்சாகமாக செய்வீர்கள் அதே நேரத்தில் குழப்பமான மனநிலையும் உருவாகும்.

ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் வேலை செய்யுங்கள். இந்த மாதம் காதல் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல நேரமாக இல்லை. உங்களுக்குள் பரஸ்பர புரிதல் வேண்டும் இல்லாவிட்டால் பிரிவினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பார்ட்னருடன் வெட்டிப்பேச்சு வீண் வம்பு பேச்சுக்களை பேச வேண்டாம் நிதானமாக பேசுங்கள். அப்போதுதான் உறவு வலுப்படும்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள் இல்லாவிட்டால் அன்பானவரை பிரிய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இந்த மாதம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள் இல்லாவிட்டால் சிக்கலை எதிர்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் அதிகரிக்கும் கவனமாக இருங்க.

பஞ்ச பூதங்களில் தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும்.

தனுசு
குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் உங்க உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டியிருக்கும். எதையும் அலட்சியப்படுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீரியஸ் ஆகிவிடும். சின்ன நோய் தொற்றுதானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள் அதுவே சிக்கலில் கொண்டு போய் விடும். உங்க அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால் கவனமாக இருங்கள். மன அழுத்தத்ப்பிரச்சினை தீர குடும்ப உறுப்பினர்களுடன் சகஜமாக உரையாடுங்கள். வேலை விசயமாக நீங்க ரொம்ப கவனமாக இருங்க. இந்த மாதம் உங்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்க நிதி நிலைமை உங்களுக்கு உற்சாகத்தை தரும். பயணங்கள் சந்தோஷமாக அமையும். உங்க பெர்சனல் வாழ்க்கை சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். மாணவர்களுக்கு வெளிநாடு வாய்ப்பு தேடி வரும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன ஊடல்கள் வந்து செல்லும் பண விவகாரங்கள் நிறைய சந்தோஷத்தை கொடுக்கும். திடீர் பண வரவு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். பண விவகாரங்களில் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கள் நல்லதே நடக்கும்.

பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது.

குரு உங்களுக்கு சாதகமான கிரகம்.

மகரம்
சனியை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப நல்ல மாதம். உங்க ஹார்ட் ஒர்க் நீங்க நினைத்ததை நிறைவேற்றி வைக்கும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பணம் அபரிமிதாக வரும்.

பணத்தைப் பற்றிய கவலைகள் நீங்கிவிடும். நிலுவையில் இருந்த வேலைகளை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். உங்க நிதி நிலைமையை அதிகரிக்க நீங்க செய்யும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தொழிலதிபராகவும், பிசினஸ்மேனாகவும் இருந்தால் உங்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். அதே நேரம் கடுமையான போட்டியை எதிர்கொள்வீர்கள்.

உங்க அறிவாற்றலும் திறமையும் அதிகமாகும். நீங்க செய்யும் வேலைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். ஆன்மீக விசயங்களில் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். உங்க கல்யாண வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகமாகும். கணவன் மனைவி உறவில் காதல் களை கட்டும். வீட்டில் விருந்து விஷேசம் என உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் பெற்றோர்கள். உறவினர்களுடனான உறவில் சந்தோஷமாக இருப்பீர்கள். நிலம், பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் தீரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.

பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது.

கும்பம்
சனியை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் லாபங்கள் நிறைந்த மாதம், வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

நீங்கள் பார்க்கும் வேலையை விட உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்க ஏற்கனவை நல்ல வேலை பார்ப்பவராக இருந்தால் அதில் நல்ல புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்க பொறுப்புணர்வும் அதிகமாகும். உங்க கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

உங்க நிதி நிலைமை ரொம்ப நன்றாக இருக்கும். பிசினஸ் மேனாக இருந்தால் நீங்கள் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தை அவ்வப்போது கவனிங்க இல்லாவிட்டால் அவ்வப்போது பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். எதிரிகள் தலையெடுப்பார்கள் அவர்களின் தொல்லையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளையும் சந்தோஷமாக சமாளிப்பீர்கள்.

பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

மீனம்
குருவை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகமாகும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் உற்சாகமாக படிப்பீர்கள். உயர்கல்வி வாய்ப்பு தேடி வரும்.

மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். தொழில் செய்பவர்கள் பிசினஸ் செய்வர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும், நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். பெர்சனல் வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகமாகும்.

எந்த சிக்கல்கள் இருந்தாலும் அதை எளிதாக சமாளிப்பீர்கள். கவலை வேண்டாம் பிரச்சினைகளை அடித்து துவம்சம் செய்து விடுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சீனியர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்க பெர்சனல் வாழ்க்கையில் நீங்கள் பதற்றமாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். வம்பு வழக்குகளில் இருந்து விலகியே இருங்கள் உங்களை நீங்களே அமைதிப்படுத்துங்கள். வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். நிம்மதியாக இருப்பீர்கள்.

பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும்.