உலகில் படைக்கப்பட்ட பல விசயங்கள் எல்லாமே இரண்டாக தான் அமைந்திருக்கும். இரு துருவங்கள், துன்பம், இன்பம், ஆண், பெண் என இரண்டு இரண்டாக அமைந்ததே.
அவ்வகையில் புண்ணியம் செய்ததால் தான் நாம் இந்த பூமியில் மனிதராய் பிறந்து நன் முறையில் வாழ்ந்து இறைவன் அடையும் வரம் பெற்றிருக்கிறோம்.
இப்படியான மனிதப்பிறப்பில் நம் வாழ்க்கையில் நாம் துன்பங்களை சந்திப்பது உண்டு. அவ்வை பாட்டி கூட கொடிது கொடிது வறுமை கொடிது என கூறியுள்ளார். அப்படியான வறுமைகள் நீங்க உறுதுணையாக இருப்பது அபிராமி அந்தாதி.
அம்பிகையின் நினைப்பிலேயே மூழ்கிய அபிராமி பட்டர் அமாவாசை நாளை பௌர்ணமி எனக்கூறி மன்னரின் தண்டனைக்கு ஆளாகி கடைசியில் அம்பிகையே நேரில் தோன்றி பௌர்ணமி நிலவாக தோன்றியது வரலாறும் உண்டு.
அப்படியாக அந்த சிறப்புகள் பல மிகுந்த அபிராமி அந்தாதியில் வறுமைகள் நீங்க ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளது.
அபிராமி பட்டர் எழுதிய இந்த அந்தாதி பாடலை இந்த வெள்ளிக்கிழமை நாளில் பாராயணம் செய்வோம்…
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.