உங்கள் கைகளில் இருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
உங்கள் கைரேகையில் மட்டுமல்ல உங்கள் விரலிலும் கூட உங்களைப் பற்றிய பல ரகசியங்கள் இருக்கிறது.
இது ஜோதிடசாஸ்திரத்தின் மூலம் மட்டுமல்ல அறிவியல்ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆள்காட்டி விரல் அவர்களின் குணத்தை பற்றி பல உண்மைகளைக் கூறக்கூடும். இந்த பதிவில் பெண்களின் ஆள்காட்டி விரலின் நீளம் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
- ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட நீளம் குறைவாக உள்ள பெண்கள் அதிக தாங்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகமுள்ள பெண்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு குறைவாக உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது ஓட்டப்பந்தயம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள்.
- இவர்கள் மற்ற பெண்களை விட வலிமையானவர்களாக இருப்பார்கள்.
- ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக இருக்கும் பெண்களின் மூளையின் செயல்திறன் மிகவும் அதிகமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
- இவர்கள் கணிதத்தில் புலியாக இருப்பார்களாம். இயற்கையாகவே கருப்பையில் அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாட்டுக்கு உள்ளான பெண்களின் மூளையின் செயல்பாடு மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.
- கருப்பையில் அதிக டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாட்டுக்கு ஆளாவது அவர்களின் பாலியல் செயல்திறனை நிர்ணயிக்கிறது.
- ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்களின் அணுகுமுறைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.
- ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக இருக்கும் பெண்களின் நினைவாற்றல் சக்திவாய்ந்ததாக இருக்கும்.
- இவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கும், இவர்கள் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் இவர்களின் நினைவாற்றலும் ஒரு முக்கிய காரணமாகும்.
- இந்த விரலின் நீளம் குறைவாக உள்ளவர்கள் எளிதில் கவலை மற்றும் மனஅழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. கருப்பையில் அதிகமான ஆண் ஹார்மோன்களின் வெளிப்பாடு பெண்களை மிகவும் பாதிக்கும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- இதனால் இவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
- இந்த விரல் நீளம் குறைவாக இருக்கும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள்.
- இவர்களின் சுமூகமான அணுகுமுறையாலும், புத்திக்கூர்மையாலும் இவர்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்வார்கள்.
- சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் இவர்களின் திருமண வாழ்க்கை இறுதியில் வெற்றிகரமானதாக அமையும்.