சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான சமுர்த்தி வங்கிகளில் கணினி பயிற்சியாளர்களாக கடந்த காலங்களில் தகுதியான இளைஞர் யுவதிகள் சேர்க்கப்பட்டு நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இன் நடைமுறை சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது இவர்களின் சேவையை பெற்றுக்கொள்வது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இது சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள இளைஞர் யுவதிகள் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது.
இன் நியமனமானது எதிர்காலத்தில் பொருத்தமான ஆட்சேர்ப்புத் திட்டத்தின்கீழ் நிரந்தர நியமனமாக வழங்கப்பட வேண்டுமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.