குரு பெயர்ச்சி ஆரம்பம்! அள்ளி கொடுக்க காத்திருக்கும் பஞ்சபூதங்கள்…. ஆட்டிப்படைக்க போகும் உக்கிர சனி! யாருக்கெல்லாம் ஆபத்து தெரியுமா?

மார்ச் மாதம் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது யாரெல்லாம் சவால்களை சந்திக்கப் போகிறீர்கள் என்று கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து கனிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மையும் தீமையும் கலந்த மாதமாக இருக்கப் போகிறது. உங்களுடைய உடல் நிலைதான் உங்களை கவலைப்படுத்தும் ரொம்ப சோர்வாக இருப்பீங்க. உடல் பலவீனமாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் இருந்தாலும் அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும். காதலிப்பவர்களுக்கு அன்பு நிறைந்த மாதமாக இருக்கும்.

இருவரும் ஒருவருக்கு கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வீர்கள். காதலில் நெருக்கம் அதிகமாகும். திருமணம் பற்றி பேச இது சரியான சமயமல்ல. இந்த மாதம் குடும்பத்தில் காதலைப் பற்றி பேசினால் சில எதிர்ப்புகளை எதிர்கொள்வீர்கள். இந்த மாதம் வருமானத்தை விட அதிக செலவுகள் இருக்கும்.

சிக்கனமாக செலவு செய்யுங்கள். இந்த மாதம் வேலை விசயமாக பயணங்கள் செல்வீர்கள். எந்த ரகசியத்தையும் யாரிமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதுவே உங்களுக்கு சிக்கலையும் சிரமத்தையும் ஏற்படுத்தும். பாதிப்புகள் குறைய செவ்வாய் பகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

இந்த மாதம் நெருப்பு உங்களுக்கு நன்மை செய்யும்.

ரிஷபம்
மார்ச் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்கள் அதிகமாகும் நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த காரியம் இந்த மாதம் வெற்றிகரமாக முடியும்.

இந்த மாதம் உங்களுடைய பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் லாபமும் வருமானமும் அதிகமாக இருக்கும். வேலை தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வீடுகள் வாங்கவும் சொத்துக்கள் வாங்கவும் நிறைவான மாதம். உங்க சொந்த வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடைபெறும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றவர்களை கவனிப்பதன் மூலம் உங்களின் சந்தோஷம் அதிகமாகும் எந்த சூழ்நிலையிலும் பெற்றவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலக வேலையில் நீங்க கவனமாக இருங்கள்.

உங்களுடைய எதிரிகளிடம் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். மன ரீதியாவும்,உடல் ரீதியாகவும் நீங்க ரொம்ப வலுவாக இருப்பீர்கள். சுகாதாரமான உணவுகளை சாப்பிடுங்கள் இந்த மாதம் உங்களுக்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும்.

மிதுனம்
இந்த மாதம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதம் வேலையை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும் முன்பாக பழைய வேலை எதையும் விட்டு விட வேண்டாம்.

படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும். உங்க உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். உங்க உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் தொடர்பாக எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

உங்க நிலைமை இந்த மாதம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கக் கூடிய நல்ல வாய்ப்புகளை பன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க அப்பா உடன் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்கள். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்றாலும் வேலை விசயமாக நீங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும்.

வயிறு பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க உணவு விசயத்தில் விட்டுக்கொடுக்க வேண்டாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதம் காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகமாகும். அவ்வப்போது உங்களுக்கு இடையே ஊடல்கள் ஏற்படும் விட்டுக்கொடுத்து போங்க இல்லாவிட்டால் உங்களுக்கு இடையே பிளவு வந்து விடும்.

பிரிவு வந்தாலும் உறவு நீடிக்கும். எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்றாலும் அதை நிறைவேற்றுவீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதல் இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதம் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். போட்டித்தேர்வு எழுதுபவர்களும் நன்றாக தேர்வுகளை எதிர்க்கொள்வீர்கள்.

வேலையில் ரொம்ப பிசியாக இருப்பீர்கள். உங்களுக்கு பணம் விசயத்தில் நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும். மாத இறுதியில் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் எனவே உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிக சவால்களை எதிர்கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகமாகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும். வேலையில் உங்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அதற்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் புரமோசனுடன் டிரான்ஸ்பர் கிடைக்கும். பொறுமையோடும் நிதானத்தோடும் வேலை செய்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

இந்த மாதம் வியாபாரிகளுக்கு ரொம்ப நல்ல மாதம் லாபம் கிடைக்கும். மாத தொடக்கத்தில் நிறைய பணம் வரும். மாத பிற்பகுதியில் உங்களுக்கு செலவுகள் அதிகமாகும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும் வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்கள்.

பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். விட்டுக்கொடுத்து போங்க. குடும்பம் குழந்தைகளுடன் குதூகலமாக இருப்பீர்கள். உங்க உடல் ஆரோக்கியம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும்

உங்க ராசிநாதன் சூரியன் நன்மை செய்யும் கிரகம்

கன்னி
இந்த மாதம் உங்களுக்கு சவால்கள் அதிகம் நிறைந்த மாதம் குடும்பத்தில் ஏற்படும் அழுத்தமான சூழ்நிலை மனதளவில் தொந்தரவு செய்யும். வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க நீங்கள் சில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். எந்த முடிவை எடுத்தாலும் அதை நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள்.

உங்க வீட்டிற்கு வரும் புதிய நபரால் சில பிரச்சினைகள் வரலாம். கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.

விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் ஈஸியாகும். மாணவர்களுக்கு இந்த மாதம் நன்மையும் தீமையும் இணைந்ததாக இருக்கும். உங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துங்கள் உயர்கல்வி செல்ல சில தடைகள் ஏற்படும் தடைகளை உடைத்து முன்னேறி வெற்றி பெறுவீர்கள்.

காதல் வாழ்க்கையில் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. காதல்களிடையே மோதல் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளிப்பீர்கள். வேலையில் பிசியாக இருப்பீர்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற மாதம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகமாகும். நிதி நெருக்கடியை சமாளிக்க சேமித்து பழகுங்கள்.

நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி.

உங்களுக்கு உங்க ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.

துலாம்
இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப முக்கியமான மாதம் உங்க எதிர்காலம் குறித்த கனவை நனவாக்குவீர்கள். உங்களின் வெற்றிக்கான வாசல்கதவு திறக்கும் புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

அதன் மூலம் புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். வேலையில் கடினம் இருந்தாலும் உற்சாகமாக வேலை செய்வீர்கள். உங்களின் அன்பால் அனைவரின் இதயத்தையும் வெல்வீர்கள். வயது மூத்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உங்களின் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். புத்திசாலித்தமான வேலையால் வெற்றிகள் தேடி வரும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியை தேடித்தரும். எதிராளிகளிடம் கவனமாக இருங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு இந்த மாதம் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் செலவுகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

பஞ்ச பூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்
இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக அமையும். பொன்னான வாய்ப்புகள் தேடி வரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துக்கொள்ளுங்கள். உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றிகரமாக அமையும். அலுவலகத்தில் உங்களின் திறமை பளிச்சிடும். வேலையில் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் திறமையால் அதை செய்து முடிப்பீர்கள்.

வேலை விசயமாக நீங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகளை ஈஸியாக சமாளிப்பீர்கள். புதிய வேலைகள் கிடைக்கும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். வேலையில் உள்ள பிசியால் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை சமாளிப்பது சிரமமாக இருக்கும்.

உங்க வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு கொஞ்சம் நேரம் செலவு செய்யுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

பஞ்ச பூதங்களில் தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும்.

நன்மை தரும் கிரகம் செவ்வாய் மற்றும் புளூட்டோ.

தனுசு
இந்த மாதம் உங்களுக்கு வேலை விசயமாக சில முன்னேற்றங்கள் ஏற்படும். கடினமாக உழைத்து திறமையை வெளிப்படுத்துவீர்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு எம்என்சி கம்பெனியில் வேலை கிடைக்கும். விரும்பிய வேலையை பெறலாம்.

உங்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அனைத்து பொருட்களும் விற்றுத்தீரும் லாபம் அதிகரிக்கும். புதிய கஸ்டமர்கள் வருவார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு பயணங்களும் தேடி வரும். பயணங்களின் மூலம் லாபம் வரும் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டமும் லாபமும் கிடைக்கும். நீங்கள் நிறைய சேமிப்பீர்கள்.

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். நீண்ட கால பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உங்க காதல் வாழ்க்கையில் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.

பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது.

குரு உங்களுக்கு சாதகமான கிரகம்.

மகரம்
இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதம். பல நல்ல வாய்ப்புகள் வரும் அதை பயன்படுத்திக்கொள்வீர்கள். நல்ல அனுபவங்கள் தேடி வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்பு வீண் போகாது. வெற்றிகள் தேடி வரும் மதிப்பு மரியாதை கூடும் அலுவலகத்தில் கவுரவம் தேடி வரும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கூட்டுத்தொழிலில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நஷ்டமும் அதனால் பிரச்சினையும் தேடி வரும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை சீராக இருக்கும். புத்திசாலித்தனமாக வேலை செய்தால் மட்டுமே பணத்தை சேமிக்க முடியும். மாத பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாமாக உல்லாச பயணம் செல்வீர்கள். உங்க உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும் உணவில் அக்கறை செலுத்துங்கள்.

பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது.

சாதகமான கிரகம் உங்க ராசிநாதன் சனி.

கும்பம்
இந்த மாதம் உங்களுக்கு லாபகரமான மாதம். பணம் தேடி வரும். கூடுதல் பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பவர்களுக்கு நல்ல மாதம். உங்களின் சிக்கல்களை எளிதில் தீர்ப்பீர்கள். பணிச்சூழல் கடுமையாக இருக்கும் மேலதிகாரிகளிடம் பேசுங்கள்.

பிரச்சினை எளிதில் சமாளித்து உங்களுடைய வேலையில் கவனம் செலுத்தமுடியும். மாத பிற்பகுதியில் கவனமாக இருங்க. இல்லாவிட்டால் சிக்கல் ஏற்பட்டு விடும். தவறுகளை உடனடியாக சரிசெய்யுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமாக இருந்தால் மட்டுமே வெற்றிகள் தேடி வரும்.

வழக்குப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வெற்றிகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக்கொடுத்து போங்க. காதலர்களிடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்தாலும் எளிதாக சமாளியுங்கள் விட்டுக்கொடுத்து போங்க. உங்களுடைய காதல் நீடிக்கும். உங்க உடல் ஆரோக்கியம் இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

சாதகமான கிரகம் சனி. உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும். யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.

மீனம்
இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமையும். மகத்தான வெற்றிகள் தேடி வரும். பொருளாதார முன்னேற்றங்கள் நிறைந்த மாதம். கிடைத்த வாய்ப்புகளை எளிதில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களுடைய முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு அதிக லாபம் வரும். வேலை விசயமான பயணம் செல்வீர்கள்.

புதிய தொழில் தொடங்க இது ஏற்ற மாதமல்ல கொஞ்சம் காத்திருக்கவும். குடும்பத்தில் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். எந்த பிரச்சினைகளையும் விட்டுக்கொடுத்து போங்க கோபமான பேச்சை விட்டு விட்டு அன்பையும் பாசத்தையும் கலந்து பேசுங்கள். அனைவரின் இதயத்தையும் வெல்ல முடியும். நிதி நிலைமை நன்றாக இருக்கும் பணத்தை சேமியுங்கள். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் குரு , நெப்டியூன்.