மேஷம் :
தங்களது துறையில் பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். தங்களின் மதி நுட்பத்தை வெளிப்படுத்த சரியான தருணங்கள் ஏற்படும். உங்களுக்கு தொழிலில் வளரச்சியை அளிப்பார். பதவி உயர்வுகளை அளிப்பார். காதல் உறவைத் திருமண உறவாக மாற்றி அமைப்பார். திருமண வாழ்க்கையைச் சிறக்க வைப்பார். நிதிநிலை சிறக்க வைப்பார். தொழிலில் வளர்ச்சி அளிப்பார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை
ரிஷபம் :
சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சில நேரங்களில் ஏற்ற, இறக்கமாக அமையும். சிறு குறு தொழில் செய்யும் பணியாளர்களுக்கு தங்களது தொழிலில் அலைச்சல்களின் மூலம் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறக்கும். பெண்கள், முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வங்கிக் கடன் கிட்டும். தொழிலில் தாமதம் நீங்கும். கல்வியில் படிப்படியாக மேன்மை கிட்டும்
மிதுனம் :
உத்தியோகம் தொடர்பான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதன் மூலம் அலைச்சல்கள் உண்டானாலும் இறுதியில் தாங்கள் விரும்பிய வண்ணம் அனைத்தும் கைகூடும். தனம் பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். பதவி உயர்வு, வருமான உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு முதலீட்டில் அதிக லாபம் கிட்டும். கல்வி சிறக்கும்.
கடகம் :
இதுவரை தற்காலிக பணியில் இருந்து வந்தவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். நண்பர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகத்தால் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். நிலம், வண்டி, வாகனங்களால் ஆதாயம். நல்லுறவு பராமரிப்பதன் மூலம் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளைக் களையலாம். தொழிலில் மேம்பட்ட நிலை காணலாம். பொருளாதார நிலை உயரும். கல்வி சிறப்பாக இருக்கும்
சிம்மம் :
உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்துவந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்று கொண்டிருக்கும் பல வேலைகளை சிறப்பாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். பதவி உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கு பொன்னான காலம் இது. மே மாதத்திற்குப் பிறகு குடும்ப ஒற்றுமை கூடும்.
போட்டிகளில் வெற்றி கிட்டும். உத்தியோக உயர்வு கிட்டும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வியில் பாராட்டு கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
கன்னி :
சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலம் உத்தியோகத்தில் பதவி உயர்வு அடைவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நன்று. திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.
துலாம் :
பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு சிறு அலைச்சலுக்கு பின் கிடைக்கும். பணியை விரும்பி செய்தால் முன்னேற்றமான வாய்ப்புகளும், நிரந்தர பணியும் சாதகமாக அமையும்.
விருச்சிகம் :
விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்போது அலைச்சல்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு :
உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சிறப்பு பயிற்சி வகுப்புகள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்து கொண்டிருந்த உத்தியோகம் தொடர்பான உதவிகள் சிறப்பாக அமையும்.
மகரம் :
பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு சற்று தள்ளிப்போகும். புதிய அதிகாரிகளின் அறிமுகம் சாதகமான சூழலை உருவாக்கும். மற்றவர்களுக்கான கடன் உதவிகளுக்கு முன்ஜாமின் இடுவதை தவிர்க்கவும்.
கும்பம் :
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சில தடைகளுக்கு பின் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நன்மையை அளிக்கும்.
மீனம் :
உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைக் காட்டிலும் தாமே முடிப்பது நன்மையை தரும். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யவும். வேலை தொடர்பான ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும்.