சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு, சனி, ராகு கேதுவினால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! யாருக்கு திடீர் ராஜயோகம் தெரியுமா?

நவகிரகங்களில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேதுவின் சஞ்சாரம் ஒருவரின் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அதே போல செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சாரம் பார்வையும் சில மாற்றங்களையும் யோகங்களையும் தரும்.

இவற்றை வைத்துத்தான் பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மையும் ராஜயோகமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

நன்மை செய்யும் பார்வைகள்
கிரகங்களில் சனி இருக்கும் இடமும் குரு பார்க்கும் இடமும் நன்மை செய்யும். பொதுவாக சனி ஒருவரின் ஜாதகத்திலோ, கோச்சார ரீதியாகவோ 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரித்தால் நன்மைகளை செய்யும்.

அதே போல குருவின் பார்வை 2,4,7,9,11 ஆகிய இடங்களின் விழுந்தால் அது சுபங்களை தரும். ராகு கேது 3,6,11ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் போதும், சுக்கிரன் 6,11,12 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மைகள் நடைபெறும்.

யோகமானவர் யார்
மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும், வீடு மனை வாங்கும் யோகமும் கிடைத்தால் அவர் யோகக்காரர்தான். அதே போல செய்யும் தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைய வேண்டும், அந்த வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும்.

நம்முடைய குழந்தைகள், வாழ்க்கை துணையினால் சந்தோஷம் கிடைத்தால் அவர்களும் ராஜயோகத்தை பெறக்கூடியவர்கள்தான். இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் எட்டாம் வீட்டில் சஞ்சரித்தாலும் குருவின் பார்வை 2,4ஆம் வீடுகளின் மீது விழுகிறது. அதே போல சனிபகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு கேது இப்போது 12 மற்றும் 8ஆம் வீடுகளில் இருந்தாலும் ஆவணி மாதம் முதல் 11 மற்றும் 7ஆம் வீடுகளுக்கு மாறுகிறது.

சார்வரி புத்தாண்டில் ஆதாயம் விரையம் பார்த்தால் ரிஷபம் ராசிக்கு 14 ஆதாயம் 11 விரையம் இருக்கிறது. இந்த ஆண்டில் உங்க சம்பாத்தியத்தில் செலவை விட சேமிப்பு அதிகமாகும். நன்மைகள் அதிகம் நடக்கும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டில் நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பார்வை சிம்மம் ராசிக்கு சில மாதங்கள் கிடைத்தாலும் வருட மத்தியில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் இரண்டாம் வீட்டின் மீது பார்வை விழுகிறது. சுகமான ஆண்டாக பணவரவு அதிகமான ஆண்டாக இருக்கப் போகிறது.

சனி பகவான் சஞ்சாரமும் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் உள்ளதால் உங்களுக்கு எதிரிகள் தொந்தரவு கடன் பிரச்சினை தீரும். சார்வரி புத்தாண்டில் உங்க ராசிக்கு பல நன்மைகள் நடக்கப் போகுது ஆதாயம் 14 உள்ளது. விரையம் 2 மட்டும்தான். எனவே நீங்க சம்பாதிக்கும் பணத்தினால் நிறைய லாபம் கிடைக்கும் செலவு குறைவாகத்தான் உள்ளது. அதிகமான பலன்களை நீங்கள் அடையப்போகிறீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய நன்மைகள் நடக்கப் போகிறது. ஏழரை சனி முடிந்து விட்டது. குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் குதூகலத்தை தரப்போகிறது. உங்களுக்கு ஆதாயம் 5 விரையம் 5 கிடைக்கப் போகிறது.

50 சதவிகித லாபம் கிடைக்கப் போகிறது. நஷ்டம் இல்லை. வருமானம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாகும். சனியால் பல நன்மைகளும் கிடைக்கப் போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராஜயோக ஆண்டாக அமைந்துள்ளது.

மீனம்
குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டில் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் சனி பகவான் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார் குரு பகவானும் 11ஆம் வீட்டிற்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார்.

அனைத்து விதமான யோகங்களும் வரப்போகிறது. அதே நேரத்தில் ஆதாயம் 8 கிடைத்தால் விரையம் 11 நடக்கும் எனவே சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.