மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகத் தவறினால், அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக அர்ஜூன் மகேந்திரன் கருதப்படுகின்றார்.