தனுஷ்கோடிக்கு பலத்த பாதுகாப்பையும் மிறி இலங்கையிலிருந்து வந்த குடும்பத்தார்கிளடம் பாதுகாப்புவட்டாரங்கள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.
இன்று இதிகாலையில் தனூஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை மன்னார் பகுதியிலிருந்து பைபர்கிளாஸ் படகில் வந்து இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பினி உள்பட நான்கு பேரிடம் உளவுத்துறை கியூபிரிவு சுங்கத்துறை மற்றும் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.; விசாரனையில் மன்னார் பகுதியைச்சேர்ந்த நிரோசன் ( 28) பெயின்டர் வேலை செய்துவருவதாகவும் வருவாய் இன்றி கஷ்டத்தில் இருப்பதால் தனது மனைவி மேரிஸ்டெல்லா(23) ஒன்பது மாத கர்ப்பினியுடன் தனது ஐந்து வயது பெண் குழந்தை ஜாஸ்மின் மற்றும் சகோதரர் ரீகன் உள்ளிட்ட நான்கு பேருடன் இலங்கை மன்னார் பகுதியைச்சேர்ந்த பைபர் படகில் ரூ 60 ஆயிரம் கொடுத்து தனூஷ்கோடிக்கு இன்று அதிகாலை வந்ததாக கூறினர்
கடந்த 1990 ல் இலங்கையில் நடைபெறறுவந்த யுத்தகாலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2011ல்மண்டபம் அகதி முhகமிலுள்ள அரசுமருத்துவமனையில்; தனது மனைவிக்கு வயிற்றில் ஆப்ரேசன் செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார் பின் கடந்த 2012ல் பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திருமபிச் சென்றனர் மீண்டும் தற்போது பிரசவத்திற்க்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
இவர்களிடம் விசாரணை நடத்திய போலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்வர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்