இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்!

“உணவே மருந்து என்ற காலம் மாறி போய் மருந்தே உணவு” என்ற காலம் வந்து விட்டது.

உணவில் நச்சு தன்மையே பெரிதும் கலந்துள்ளது, உணவு இயற்கை வடிவில் இல்லாததால் நமக்கு பல புதிய நோய்களும் வர தொடங்கி உள்ளன.

இது புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் ஒரு மிக பெரிய தொடக்க புள்ளியாக இருக்கிறது.

இந்த பிரச்சினையில் ஒன்றுதான் முடி உதிர்வும், எந்தெந்த உணவுகளை உண்டால் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்ற முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மீன்கள்
கடலில் உள்ள நச்சு தன்மை காரணமாக மீன் சத்தான உணவாக கருதப்படுவதில்லை. கடலில் மெர்குரியின் அளவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் கடலில் வாழும் மீன்களும் இதனை உண்கிறது. பிறகு நாமும் இந்த மீனை சாப்பிடுவதால் உடலில் இந்த மெர்குரி அதிகம் சேர்கிறது. இது முடி கொட்டும் பிரச்சினைக்கு பெரிய காரணியாக கருதப்படுகிறது.

வறுத்த உணவு
நம்மில் பலருக்கு எண்ணெய்யில் பொறித்த அல்லது வறுத்த உணவு என்றால் அவ்வளவு பிரியம்தான்.

ஆனால், அதிகமாக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஹார்மோன்கள் குறைபாடு ஏற்பட்டு முடி உதிர்வை கொடுக்கும். இதனால் விரைவிலே வழுக்கையும் வருகிறது.

காபி, டீ
வேலை நேரங்களில் நம்மை அறியாமலே பல முறை டீ மற்றும் காபியை குடித்து கொண்டே இருப்போம். இதன் விளைவு அதன் பிறகுதான் ஆரம்பமாகும்.

நீங்கள் ஒரு நாளைக்கு அதிக முறை இவற்றை அருந்தினால் இவை உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முடியின் நலனையும் உருகுலைக்கும்.

முடியின் பாதுகாப்பிற்கு
உங்கள் முடி அதிகம் கொட்டுக்கிறதென்றால் மேற்கண்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். அத்துடன் இயற்கையிலான உணவு பழக்கத்தை மேற் கொள்ளுங்கள்.

முடியின் வளர்ச்சிக்கு வைட்டமின் சி, புரதம், வைட்டமின் பி, ஜின்க், காப்பர் போன்றவை நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள். இது முடி உதிர்வை தடுத்து வழுக்கை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி தரும்.