சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர்.
சீன விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளனர்.
அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது. ஆனால், பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.இதைத்தொடர்ந்து ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு பொருத்தும் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு, புதிய காதுகள் பொருத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.