கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா?
நெய்யை தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவது நல்லது. நெய்யை உருக்குவதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. மிதமான தீயில் உருக்க வேண்டும். கட்டியிலிருந்து திரவ நிலைக்கு நெய் வந்த உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
உருக்கிய நெய் கொதித்தால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். நெய்யை கொதிக்க வைத்து பயன்படுத்துவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
இதேபோல் நெய்யை திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதும் தவறானது. அப்படிச் செய்தால் உடலில் கொழும்பு அமிலங்கள் சேர்ந்து விடும். இதனால் உடற்பருமன் பிரச்சினை உருவாக வாய்ப்பு அதிகம்.
எனவே தேவையான அளவு நெய்யை மட்டும் பயன்படுத்துங்கள். எண்ணெய் விடயத்திலும் இதே முறையைப் பின்பற்றுவது நல்லது.