கிளிநொச்சி, பெரிய பரந்தன் பிரதேச இளைஞர்களால் இன்று மஞ்சு விரட்டு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக் கட்டு போன்று மஞ்சு விரட்டு பாரம்பரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பலகிராமங்களில் மஞ்சு விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. யுத்தத்திற்கு பின்னர் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு மஞ்சு விரட்டு மீண்டும் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளரால் தனது மாட்டை பிடித்து கழுத்தில் கட்டப்பட்ட துணியை கழற்றினால் இவ்வளவு தொகை பரிசு என அறிவிக்கப்பட்டு மாடுகள் வெடிகொளுத்தி விரட்டப்படும். விரட்டப்படும் மாடுகளை இளைஞர்கள் மடக்கி பிடிக்க வேண்டும். இதுவே மஞ்சு விரட்டு விளையாட்டாக இருந்து வருகிறது.
இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.