சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.
இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. முதல்நாள் போகி பண்டிகை. இந்நாள் இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
2. இரண்டாம் நாள் சூரியன் பொங்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
3. மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுத் தொழிலுக்கு துணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும்.
4. நான்காம் நாள் காணும் பொங்கல்.
- அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள். சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும்.
- குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும்.
- பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.
நன்றி -தமிழ் இணையம்