சத்தமின்றி ஒரு சாதனையை படைத்து வருகிறது, நமது பாரம்பரிய சித்த மருத்துவம். ஆம்.. கொரோனாவை குணப்படுத்துவதில், வியத்தகு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது சித்த மருத்துவம்.
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் உலுக்கியபோது, அதைக் குணப்படுத்தியதில், பப்பாளி இலை சாறு, நிலவேம்பு கசாயம் போன்ற நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அரசே இதை அங்கீகரித்தது.
இந்த நிலையில், உலகை உலுக்கி வரும் கொரோனாவை ஒழித்துக் கட்டுவதிலும், சித்த மருத்துவம் தனது சாதனையை நிகழ்த்தி வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாரம்பரியமான மூலிகை மருத்துவத்தால், 7 நாட்களில் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட்டு வருகிறார்கள். உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா. இதனால் அலோபதியில் மருந்து கண்டுபிடிக்க கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி வருகின்றன, உலக வல்லரசு நாடுகள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் ஒரு பக்கம் அலோபதி முறையில் மருத்துவம் அளித்து வரும்நிலையில், மறுபுறம் பாரம்பரிய முறையான, மூலிகை மருத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்காக, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி அமைத்தது.
இங்கு, காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் 120 பேர் சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்களில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 பேர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர்.
சித்த மருத்துவத்துறை அங்கீகரித்துள்ள, கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடை கசாயம், கற்பூரவள்ளி ரசம், சிறப்பு மூலிகை தேனீர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்ப இங்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சூரிய ஒளி சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறுகிறார் இங்கு சிகிச்சை அளித்துவரும் சித்த மருத்துவர் வீரபாபு.
ஏழு நாட்கள் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு, கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பத்து ரூபாய் விலையில் ஆயிரம் பேருக்கு தினந்தோறும் மூலிகைகள் அடங்கிய உணவு வழங்கி வந்தவர்தான், சித்த மருத்துவர் வீரபாபு. இந்த கொரோனா காலத்தில் தமிழக அரசின் அனுமதியோடு சித்த மருத்துவ முகாமை தொடங்கி அவர் மூலிகை மருத்துவம் செய்து வருகிறார்.