தென் ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.
அங்கு வேலைப்பார்க்கும் பெண் வனத்துறை அதிகாரியின் 3 வயது மகன் தனது பாட்டியுடன் இருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியே வீட்டினுள் விட்டுவிட்டு பாட்டி வெளியே சென்றுள்ளார். பாட்டியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்றுவிட்டான்.
அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்து சென்றது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த பாட்டி சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சிறுவனின் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது. சிறுத்தையானது சிறுவனை கடித்து தின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.குடியிருப்பு பகுதியை சுற்று பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறுவனை கொன்ற சிறுத்தையை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு முறை மனிதனை தின்ற சிறுத்தை மிகவும் ஆபத்தானது. அதனை கண்டுபிடித்து கூண்டினுள் அடைக்க வேண்டுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.