மேற்கு வங்க மாநிலம் ஹீக்ளி மாவட்டத்தில் உள்ள சந்திராநகர் பகுதியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு வெளி உணவகத்தில் இருந்து பிரியாணி வாங்கி வந்துள்ளார்.
அதை நேற்று இரவு சாப்பிட்ட சுமார் 41 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகள் அனைவரையும் விடுதி ஊழியர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் வெளி உணவகத்தில் இருந்து பாதுகாப்பில்லாத பிரியாணியை வாங்கி வந்து சாப்பிட்டதாலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்களில் பெரும்பாலான மாணவிகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.