இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் விவசாயியான அப்பாஜி குடும்பத்தினர்.
அப்பாஜி கூறும்போது, ‘‘ 7 தலைமுறைகளைத் தாண்டி, 100 கிளைகளுடன் பரப்பி நிற்கிறது. கடந்த ஆண்டு பெய்த கடும் மழை, சூறாவளிக் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பனைமரத்துக்கு சிறு சேதாரம் கூட இல்லை’’ என்றார்
‘‘இந்த அதிசய பனை மரத்தால் தான் எங்கள் ஊருக்கு பண்ணந்தூர் என்கிற பெயரே வந்திருக்கும்” என்கின்றனர் கிராமத்து இளைஞர்கள்.