நாளை முழுமையான ஊரடங்கு அமுல்! பொலிஸார் கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்காரணமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.