தர்மபுரி மாவட்டம் Podarankadu கிராமத்தைச் சேர்ந்தவர் Palanisami. 42 வயதான இவர் தன் உடலில் 18 கிலே எடை கொண்ட கட்டிகளால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
பிறக்கும் போது நல்ல உடல் நலத்துடன் பிறந்த இவருக்கு, 12 வயதாகும் போது சிறிய அளவிலான கட்டி முதலில் கழுத்தில் வந்துள்ளது. அதன் பின் நான்கு கட்டிகள் கைகளிலும், ஐந்து கட்டிகள் உடலின் முக்கிய பகுதிகளிலும் வளர்ந்துள்ளது.
இதனால் உடனடியாக தர்மபுரியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரின் இரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி எக்ஸ் ரே போன்றவைகளும் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. குழப்பமடைந்த மருத்துவர்கள் இந்த கட்டிகளை எடுக்க முடியாது, இதனால் உடலிற்கு தீங்கு இல்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அவரின் மூத்த சகோதரர் கூறுகையில், 12 வயது வரை நன்றாகத் தான் இருந்தான். அதன் பின் திடீரென்று சிறிதாக இருந்த கட்டிகள் நாளைடைவில் அவன் வாழ்க்கையே மாற்றும் அளவிற்கு இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை.
எங்கள் அப்பா மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் கட்டிகளை நீக்க வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், அறுவை சிகிச்சையின் போது உயிர் போவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
நாங்கள் இருப்பதோ மலைப் பகுதியில் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக உள்ள நிலையில், வெகுதூரம் சென்று இவருக்காக சிகிச்சை செலவுகள் செய்ய போதிய பணம் இல்லை, அதுமட்டுமின்றி இதை நாளைடைவில் நாங்கள் கண்டு கொள்ளவும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த நோயின் தாக்கம் காரணமாக அவருக்கு வீட்டை விட்டு வெளியில் வர பிடிக்கவில்லை என்றும் கடந்த 32-ஆண்டுகளாக இந்த நோயின் பாதிப்பில் அவதிப்பட்டு வரும் இவருக்கு யாரேனும் உதவினால் அறுவை சிகிச்சை மூலம் பலன் கிடைக்கலாம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.