நெதர்லாந்தில் இருந்து காட்போட் அட்டை பெட்டிக்குள் சுற்றி கொண்டுவரப்பட்ட போதை மாத்திரை தொகை ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் இருந்த 4960 மாத்திரைகளை சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் பெறுமதி 24.8 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கள் கொண்டு செல்லும் நிறுவனம் ஊடாக ஆடை கொண்டு வருவது போது இந்த போதை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருட்களை நெதர்லாந்தில் இருந்து கொழும்பு 15 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதை மாத்திரைகள் விசாரணைக்காக போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.