சிங்கப்பூர் அரசின் கடுமையான சட்டத்தால் ஸ்ரீலங்கா மாணவன் எடுத்த விபரீத முடிவு -சோகத்தில் பெற்றோர்

கொரோனா தொற்றை அடுத்து சிங்கப்பூரில் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் காரணமாக ஶ்ரீலங்கா மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மணில்க பொன்சேகா என்பவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்த மாணவனாவான்.

ஸ்ரீலங்காவில் சிறப்பாக கல்வி கற்று கபொத சாதாரண தரத்தில் 9ஏ உயர்தரத்தில் 4ஏ பெற்று புலமைப்பரிசில் மூலம் சிங்கப்பூர் சென்று கற்று உயர இருந்த அவன் கனவு இதன்மூலம் காவு கொள்ளப்பட்டது.

ஓகஸ்ட் 1ம் திகதி சிங்கப்பூரில் தரையிறங்கிய அவன் அங்கிருக்கும் சட்டம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளான்.

12ம் நாளன்று அருகிலுள்ள தன் நண்பனின் அறைக்கு குடிநீர் எடுக்கச் சென்ற வேளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டான்.

3மாதம் சிறையும் 25,000 அமெரிக்கன் டொலர் தண்டமும் விதிக்கப்பட்ட நிலையில் விரக்தியடைந்த அந்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்விபரீத முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.