அண்ணன் பட்ட கடனுக்காக தூக்கில் தொங்கிய தம்பி! திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நடந்த துயரம்

தமிழகத்தில் அண்ணன் பட்ட கடனுக்காக தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கு திருநாவுக்கரசு என்ற அண்ணன் உள்ளார்.

இந்நிலையில் திருநாவுக்கரசு ஓராண்டிற்கு முன்பு தீபாவளிக்கு சீட்டு பிடிப்பதாக கூறி, மக்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, திருநாவுக்கரசு சீட்டு பணத்துடன் தலைமறைவாகியதால், இது குறித்து புகார் கொடுக்கப்பட்டது. அன்று முதல் பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள், செந்தில் நாதனிடம் சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் அடுத்த வாரம் செந்தில்நாதனுக்கு திருமணம் நிச்சயகிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் இவரிடம் சீட்டுப்பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், மனமுடைந்த செந்தில்நாதன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.