தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு இளம் தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24).
தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று தனது குழந்தைகளுடன் ஹேமாவதி படுக்கையறையில் இருந்தார்.
அவர் கணவர் சந்தோஷ்குமார் வெளியில் படுத்திருந்தார்.
அப்போது திடீரென ஹேமாவதி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் கணவன் சந்தோஷ் குமார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது ஹேமாவதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என கூறினர்.
இது குறித்து பொலிசார் விசாரித்தனர். விசாரணையில், சந்தோஷ்குமார் லொறியில் தண்ணீர் வினியோகிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இவரிடம் லொறி ஓட்டுனராக பணிபுரியும் ஓட்டுனருக்கு சம்பளம் தராததால் அவரின் தாயார் ஹேமாவதியிடம் சென்று தவறான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.