வீட்டின் சிசிடிவி கமெராவில் பெற்றோர் கண்ட கடும் அதிர்ச்சி காட்சி! 54 வயது பெண்ணின் மிருகத்தனமான செயல்

சீனாவில் 11 சிறுவன் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் 54 வயது ஆயாவால் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை, பெற்றோர் சிசிடிவி கமெராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஜாங் என்று அறியப்படும் 54 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெண், சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் இருக்கும் ஒரு குடும்பத்தின் 11 மாத சிறுவனை கவனித்து வந்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர் கடந்த செவ்வாய் கிழமை சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, குழந்தைக்கு உணவளிப்பதற்கு முன் ஜாங், குழந்தையை மிருகத்தனமாக தாக்குகிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிசிடிவியில் இருக்கும் பாதுகாப்பு காட்சிகளை சோதனை செய்த போது, சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸ் மற்றும் ஜாங்கை பணியமர்த்திய ஆட்சேர்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையால் பெற்றோரிடம் தான் திட்டு வாங்கியதாகவும், அந்த கோபத்தின் காரணமாகவே சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இருப்பினும், ஜாங்கிற்கு 55 பவுண்ட் அபராதம் விதித்ததுடன், 10 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.