இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை குத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
சண்டிகரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நைட்டிங் என்ற சிறுவனும், அங்கிருந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
இந்நிலையில், நைட்டிக் திடீரென்று குடியிருப்பு பகுதியில் மோசமான நிலையில், கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்தான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் மகன் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இதையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.
அதன் படி முதற்கட்டமாக அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, உயிரிழந்த நைட்டிக் என்ற சிறுவனுக்கும், மற்றொரு சிறுவனுக்கு சம்பவ தினத்தன்று ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் தாக்கிக் கொண்ட போது, நைட்டிக்குடன் சண்டை போட்ட சிறுவன் கோபத்தில் திடீரென்று வீட்டின் உள்ளே சென்று சமயலறை கத்தியை எடுத்து வந்து, நைட்டிக்கை குத்துகிறான்.
அதன் பின் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழக்கிறான். இதைக் கண்டு உறைந்து போன பொலிசார், தப்பி ஓடி வனப்பகுதியில் மறைந்திருந்த அந்த சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் மூலம் வெளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், பெற்றோர் அவ்வப்போது தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்வது நல்லது, இல்லையெனில் இது போன்ற சம்பவம் நடப்பது அதிகரிக்கலாம் என்பதால், இது ஒரு எச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.