பரிஸில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் வீட்டில் அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது.
பூஜை வழிபாட்டுக்காக சூலத்தில் குத்தப்பட்ட தேசிக்காயிலும் சூலம் போன்ற தோற்றம் ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வழமையாக இவ்வாறு தேசிக்காயை குத்தி வழிபாடு செய்து வருகின்ற போதும், இப்படியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இதுவொரு அதிசய நிகழ்வாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வீட்டு பூஜை அறையில் உள்ள திருமால் சிலையில் தொடர்ந்தும் விபூதி மிதமாக கொட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரிஸிலுள்ள தமிழர்கள் மத்தியில் சீரடி சாய்பாபா வழிபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறான காணொளி வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.