இறுதிசடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரழிவு நோயினால் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி மாலை 6 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் உடலை 7 மணிக்கு வீட்டுக்கு கொண்டு சென்று வீட்டில் உறவினர்கள் இறுதிசடங்கு செய்துள்ளனர்.
Dead girl, 12, ‘wakes up’ while family clean her body for burial in Indonesia https://t.co/xFdxRcwujg
— Daily Mail Online (@MailOnline) August 25, 2020
அப்போது உடலை குளிப்பாட்டிய போது சிறுமி கண்களை லேசாக திறந்துள்ளார். மேலும் அவரது உடலில் வெப்பமும், இதயதுடிப்பும் இருந்து உள்ளது. இதையடுத்து சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு இறுதிசடங்குகள் முடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பாரிய அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றது.