கம்போடியா நாட்டில் மனைவி வேலைக்கு சென்ற நிலையில் தந்தை தமது மூன்று மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெப் சோக் நீத் என்ற அந்த 38 வயது தாயார் வேலைக்கு சென்று திரும்பியபோது அவரது மொத்த குடும்பமும் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டின் Ounha Veang என்ற கிராமத்திலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உள்ளூர் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 வயதான சே சோகும் தனது மூன்று மகள்களான சம் மெங் சவு(16), சம் மெங் சென்(5), மற்றும் சம் மெங் சியென்(4) ஆகியோருடன் சம்பவத்தின்போது குடியிருப்பிலேயே இருந்துள்ளார்.
அவரே தமது மூன்று பெண் பிள்ளைகளையும் கழுத்து நெரித்து கொன்றிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
இதனிடையே, தங்களது மகள்களில் ஒருவரை கொலை செய்வேன் என கணவர் முன்பு கூறியதாக அந்த தாயார் பொலிசாரிடம் கூறினார், ஆனால் தமது கணவர் நகைச்சுவையாக கூறுவதாகவே தாம் கருதியதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால் தாம் வேலை முடித்து குடியிருப்புக்கு திரும்பியபோது, உள்ளே இருந்து அறை பூட்டப்பட்டிருப்பதை அறிந்ததாகவும்,
தமது கணவருக்கும் மகள்களுக்கும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும், அவர்கள் பதிலளிக்காத நிலையில், வாசலை உடைத்து உள்ளே நுழைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளே தமது மூன்று பிள்ளைகளும் சடலமாக காணப்பட்டதாகவும், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டதாகவும் பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொலிசாருடன் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் களமிறங்கியுள்ளனர்.