வீட்டிலிருந்து மாயமான மனைவி மற்றும் 17 வயது மகள்! அவர்களின் செயலை அறிந்து அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்

தமிழகத்தில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும், மகளும் சென்றதால் அவமானத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் 17 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.

அழகு நிலையம் வைத்து நடத்தி வந்த கனகவள்ளி டிக்டாக்குக்கு அடிமையாகியிருந்த நிலையில் அதன் மூலம் ஈரோட்டை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதே போல அவரின் மகளும் ஈரோட்டை சேர்ந்த மாணவனுடன் காதலில் விழுந்தார்.

மனைவி, மகள் குறித்து அறிந்த ரவி அவர்களை கண்டித்த நிலையில் இருவரும் காதலர்களை தேடி சில மாதங்களுக்கு முன் சென்றுள்ளனர்.

இது குறித்து ரவி பொலிசில் புகார் கொடுத்தார், இதையடுத்து பொலிசார் அவரின் மனைவி, மகளை மீட்டு ரவியுடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் பின்னரும் திருந்தாத இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

வீட்டிலிருந்து இருவரும் மாயமானதால் அதிர்ச்சியடைந்த ரவி அவமானத்தால் கூனிக்குறுகி போனதோடு குடும்ப மானம் போய்விட்டதே என வருந்தியுள்ளார்.

பின்னர் தனது மகனை பார்த்து கொள்ளுமாறு சகோதரிகளுக்கு வீடியோவில் வேண்டுகோள் விடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.