17 வயது சிறுமிக்கு காதல் வலைவீசி கர்ப்பமாக்கிய இளைஞர்: மணமேடையில் மணமகன் கைது

தமிழகத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றிய கர்ப்பமாக்கிய வழக்கில் மணமேடையில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார்.

10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், தாய் வீட்டிற்கும், தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்த நிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியதை கண்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில் கடந்த 10 மாதங்களில் மூன்று பேர் சிறுமியை சீரழித்தது தெரியவந்தது.

அதாவது, தாய்மாமா வீட்டில் சிறுமி தனியாக இருந்த நேரத்தில், கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியரான 55 வயது உதயணன் என்பவர், மதுபோதையில் சிறுமியை மிரட்டி வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த ராம்ராஜ், சக்தி ஆகிய இரு இளைஞர்களும் அத்துமீறியதால், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உதயணனை கைது செய்த பொலிசார், மணமேடையில் வைத்து சக்தியை கைது செய்தனர், சிறுமி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.