இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கையில் இருந்த வெட்டு காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ். இவரும் கமல் பிரீத் என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
இவர்களை காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய குடும்பத்தார் கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பின்னர் பிரீத்தை அவர் மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பிரீத் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தாரால் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு பொலிசார் பிரீத் சடலத்தை கைப்பற்றினார்கள், அப்போது கை மற்றும் மணிக்கட்டில் நான்கு இடங்களில் வெட்டுகாயம் இருந்ததை பார்த்தனர்.
மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், என் விருப்பத்தில் பேரில் தான் தற்கொலை செய்து கொள்கிறேன், இது சம்மந்தமாக என் கணவர், மாமனார், மாமியாரை தொந்தரவு செய்யாதீர்கள். ஐ லவ் யூ பாபு என எழுதப்பட்டிருந்தது.
அதே சமயம் பீரித்தின் குடும்பத்தார் கூறுகையில், எங்கள் மகளை அவர் கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தி வந்தனர்.
அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கேற்றார் போல பீரித்தின் கைகளில் காயம் இருப்பது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.