தமிழகத்தில் திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைச் சேர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி என்பவருக்கும் கடந்த ஜுலை மாதம் 10-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினர் வாளவந்தபுரம் பகுதியில் உள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற கிருஷ்டி ஹெலன்ராணி வெகு நேரம் ஆகியும் காணவில்லை.
இதனால் கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி சடலமாக கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளன்ர.
அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் எல்லாம் மாயமாகியிருந்தது. இதனால் அருள்ராஜ் குடும்பத்தினர் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, கணவர் அருள்ராஜ் மீது பொலிசாருக்கு சந்தேகம் வர, அவரைப் பிடித்து விசாரித்த போது, அவரே கொலை செய்துவிட்ட நாடகமாடியது தெரியவந்தது.
சம்பவ தினத்தன்று அருள்ராஜ் தனது மனைவி ஹெலன்ராணியை கொள்ளிடம் ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஹெலன்ராணிக்கும் அருள்ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் நீரில் அமுக்கி கொலை செய்ததாக அருள்ராஜ் ஒப்புக்கொண்டார்.
பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்யும் அளவிற்கு இருவருக்கும் இடையே அப்படி என்ன வாக்குவாதம்? என்ன நடந்தது என்பது குறித்து சரிவர தகவல் இல்லை.