நடக்கமுடியாத மூதாட்டிக்காக நீதிபதி ஒருவர் படிக்கட்டையே நீதிமன்றமாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில்,புவன்பள்ளி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்காத மூதாட்டியொருவர் நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி வருவதில் சிரமத்தை சந்தித்ததையடுத்து, மேல் மாடியிலிருந்து இறங்கி வந்த நீதிபதி அப்துல் அசீம் அந்த இடத்திலேயே விசாரணையை நடத்தி முடித்து, தீர்ப்பளித்துள்ளார்.
மூதாட்டியிடம் ஓய்வூதிய சான்றுகளை பெற்றுக்கொண்ட நீதிபதி, மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற படிக்கட்டுக்களில் நடந்த இந்த விசாரணை குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.