திருச்சி அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாதநிலையில் கணவர் மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (28). இவருக்கும் லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியை சேர்ந்த கிறிஸ்டிஹெலன்ராணி (26) என்பவருக்கும் கடந்த மாதம் 10திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை காணாமல் போன கிறிஸ்டியை, உறவினர்கள் தேடிப்பார்த்ததில் ஆற்றில் ஆடைகளின்றி சடலமாக காணப்பட்டதுடன் அவரிடமிருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கிறிஸ்டியின் கணவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார்.
பின்பு குறித்த கொலையை நான் தான் செய்தேன் பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது அதிர வைத்துள்ளது.
திருமணமானதிலிருந்து தங்களுக்குள் தாம்பத்தியம் நடக்கவில்லை இதனால் இருவருக்கும் சண்டை எழுந்து வந்ததையும் கூறியுள்ளதோடு, பின்பு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், மீண்டும் அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அழைத்த போது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவரை நீரில் அழுத்தி கொலை செய்ததாகவும், பின்பு வண்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்தது போல் தெரிவதற்கு அவரது ஆடையைக் கழட்டி வீசியதாகவும், பின்பு அவரது நகையையையும் எடுத்து சென்றுவிட்டு, மனைவியைக் காணவில்லை என உறவினர்களிடம் நாடகமாடியதாகவும் கூறியுள்ளார்.