கனடாவில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த இளம்பெண்: திடீரென குறுக்கிட்ட கரடி செய்த செயல்!

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை கரடி ஒன்று தட்டிக்கொடுப்பதுபோல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Coquitlam நகரில், Sam Abdullah என்பவர் வழக்கம் போல் மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பெண் அவருக்கு எதிரே வந்துள்ளார். திடீரென அந்த பாதையில் கரடி ஒன்று குறுக்கிட திடுக்கிட்டுப்போய் நின்றுள்ளார் அந்த பெண்.

அந்த கரடி அந்த இளம்பெண்ணை நெருங்க, அந்த பெண் அப்படியே பயத்தில் உறைந்து நிற்க, இந்தப்பக்கம் இந்த சம்பவத்தை வீடியோ எடுப்பவரும் என்ன ஆகுமோ என அச்சத்துடன் நிற்க, கரடி அந்த பெண்ணை மேலும் நெருங்குகிறது.

தனது காலால் அந்தப் பெண்ணை ஒரு தட்டு தட்டிவிட்டு பின்வாங்குகிறது அந்த கரடி. பின்னர் அவர் நிற்பதை கண்டுகொள்ளாதது போல தெனாவட்டாக ஒரு நடைபோட, கிடைத்த இடைவெளியில் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார் அந்த இளம்பெண்.