தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்: நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்

தமிழகத்தில் இறந்து போன தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே மகன் சமாதி எழுப்பிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் அருகே களரம்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி திங்கட்கிழமை இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலை அவரது மகன், வீட்டு வாசலிலுள்ள தென்னை மரத்தடியில் புதைக்க முயற்சி செய்துள்ளார்.

இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், வீட்டுக்குள்ளேயே தந்தையின் சடலத்தை வைத்து காங்கிரீட் சுவர் கட்ட முயன்றுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர், உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று மகனை கேள்வி கேட்டதற்கு, தந்தையின் ஆசையை நிறைவேற்ற இப்படி செய்வதாக கூறியுள்ளார்.

அத்துடன் அதிகாரிகள் முதியவரின் சடலத்தை அகற்ற முயன்றபோது பாலகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒருவழியாக முதியவரின் சடலத்தை அகற்றிய அதிகாரிகள், மயானத்தில் கொண்டு சென்று தகனம் செய்தனர்.