இந்தியாவில் பப்ஜி விளையாட தடை- 118 சீன செயலிகள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி!

இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏற்கனவே இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பப்ஜி என்ற பிரபல ஆன்லைன் கேம் உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில்ம் பப்ஜி விளையாட்டில் ஈடுப்பட்டவர்களில் பலர் மன அழுத்ததிற்கு ஆளானதாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.